வினேஷ் போகத் தகுதிநீக்கம் தொடர்பான தகவல்களை, இந்திய ஒலிம்பிக் சம்மேளனத் தலைவர் பி.டி.உஷாவை தொடர்புகொண்டு என்ன நடந்தது என்பதை பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரச்னையை சரி செய்ய இந்தியா வசமுள்ள வாய்ப்புகள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார். வினேஷ் போகத்திற்கு உதவுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார். சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்திடம் இந்தியா சார்பில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்யவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.