விழுப்புரத்தில் ஏழை மக்களுக்கு அன்னதானம்

53பார்த்தது
விழுப்புரத்தில் ஏழை மக்களுக்கு அன்னதானம்
விழுப்புரம் மாவட்டம் செயின்ட் ஜான் மாற்றுத்திறனாளிகள் மேல்நிலைப்பள்ளியின் நிறுவனரும், செயின்ட் ஜான் முன்னேற்ற சங்கத் தின் தலைவருமான ஏ. ஜெயச்சந்திரனின் 2-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா நகரில் உள்ள பள்ளியில் செயின்ட் ஜான் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலாளர் எஸ். சவிதா கலந்துகொண்டு ஜெயச்சந்திரனின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஏழை, எளிய மக்களுக்கும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் அன்னதானம் வழங்கினார். இதில் குடும்ப உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி