சுவர் விளம்பரங்கள் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு

71பார்த்தது
சுவர் விளம்பரங்கள் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு
அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கும் படி தேர்தல் துறை அறிவுறுத்தியுள்ளது.

அந்த வகையில், புதுச்சேரி அருகேயுள்ள தமிழகப்பகுதியான நாவற்குளம் ஆரோவில் போலீஸ் செக்போஸ்ட் அருகில் அ. தி. மு. க. , சார்பில் இரட்டை இலை சின்னம் அனுமதியின்றி எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து ஆரோவில் போலீசார் நாவற்குளம் அ. தி. மு. க. , கிளை செயலாளர் மோகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் ஆரோவில் போலீஸ் நிலையம் எதிரில் உள்ள சுவற்றில் அனுமதியின்றி பானை சின்னம் வரையப்பட்டிருந்தது.

இது தொடர்பாக வி. சி. , பிரமுகர் திலிப்குமார் என்பவர் மீதும், புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் பாப்பாஞ்சாவடியில் தி. மு. க. , சார்பில் பானை சின்னம் வரையப்பட்டிருந்தது தொடர்பாக கிளை செயலாளர் செல்வராஜ் மீது, ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.