விழுப்புரத்தில் குரலிசை கலைஞருக்கு விருது

67பார்த்தது
விழுப்புரத்தில் குரலிசை கலைஞருக்கு விருது
அரசு கலை பண்பாட்டுத்துறையில் விழுப்புரம் மாவட்ட கலை மன் றம் சார்பாக 2022-23 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டிற்கான மாவட்ட கலைமன்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், மல்லர்கம்பம் மற்றும் நாட்டுப்புற கலைஞர் கள் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ், பொற்கிழி விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. அந்த வகையில் குரலிசை கலைஞர் பிரிவில் விழுப்புரத்தை சேர்ந்த மஞ்சம்மாளுக்கு கலை சுடர்மணி விருது மற்றும் ரூ. 10 ஆயிரம் பொற்கிழியையும் மாவட்ட கலெக்டர் சி. பழனி வழங்கி பாராட்டினார். அப்போது கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ் ஜெய்நாராயணன், தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டுத்துறை மைய உதவி இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி