விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குபதிவு

51பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் 14-ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது. 24-ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தாக்கல் செய்யப்பட்ட 64 வேட்பு மனுக்களில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தகுதியான மனுக்களில் யாரும் வாபஸ் பெறாததால் 29 வேட்பாளர்களுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஜூன் 26-ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இந்த நிலையில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1, 16, 962 ஆண் வாக்காளர்கள், 1, 20, 040 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 29 பேர் என மொத்தம் 2, 37, 031 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். தேர்தல் பாதுக்காப்புக்காக 3, 000 போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 7: 00 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் பலரும் வாக்களிப்பதில் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.