கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகக்குழு கூட்டம்

61பார்த்தது
கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகக்குழு கூட்டம்
முண்டியம்பாக்கம், செஞ்சி செம்மேடு சக்கரை ஆலைகளின் கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.

விழுப்புரம் கரும்பு விவசாயிகள் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார்.

செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் பரமசிவம் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர்கள் தண்டபாணி, தேவேந்திரன், வெங்கடசாமி, கலிவரதன், நடராஜன், விஜயகுமார், துணைச் செயலாளர்கள் ரங்கநாதன், ஆனந்தன், செந்தில்குமார், நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், 2023-24ம் ஆண்டு கரும்பு கிரய தொகை 20 நாட்களில் தருவதாக ஏற்றுக் கொண்ட நிலையில், தற்போது 50 நாட்கள் ஆகியும் வழங்காததை கண்டிப்பது. உடனே கரும்பு கிரய தொகையை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும்.

ஆலை நிர்வாகம் தொடர்ந்து இரு கரும்பு பருவத்திற்கும் விதை கரணைகளை மானியமாக வழங்க வேண்டும். முண்டியம்பாக்கம், செஞ்சி செம்மேடு ஆகிய இரு ஆலைகளிலும் 4 அரை அடி கால் இழுக்கும் கலப்பை வாங்கி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். 2024-25ம் ஆண்டு கரும்பு பருவத்திற்கு தமிழக அரசு வழங்கும் ஊக்கத் தொகையை ஒன்றுக்கு 1, 000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டுமென தமிழக முதல்வர், உழவர் நலத்துறை அமைச்சரை கேட்டு கொள்ளுதல் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி