16 வயது சிறுமிக்கு திருமணம் போலீசார் விசாரணை

55பார்த்தது
16 வயது சிறுமிக்கு திருமணம் போலீசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், குமளம்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் கஜேந்திரன்(28). இவருக்கும், மரக்காணம் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து, சமூக நலத்துறையினா் சாா்பில் மரக்காணம் காவல் நிலையத்தில் கடந்த புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், கஜேந்திரன் மற்றும் இதற்கு உடந்தையாக செயல்பட்ட கஜேந்திரனின் தாய் நாகம்மாள், சிறுமியின் தந்தை சாந்தகுமாா், தாய் மாலதி ஆகியோா் மீது மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி