புத்தாண்டை ஒட்டி அனைத்து இடங்களிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நள்ளிரவில் இருந்து புத்தாண்டை வெளிப்படுத்தும் விதமாக வாழ்த்து செய்திகளையும், ஆடல் பாடல் மற்றும் கேக் வெட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி புத்தாண்டை வரவேற்று வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் நள்ளிரவு 2 மணி வரை தங்களது புத்தாண்டு சிறப்பு ரோந்து பணிகளை முடித்துவிட்டு காவல் நிலையம் வந்த உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் காவல் நிலைய வளாகத்தில் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.