திண்டிவனம் அருகே கணவர் மாயம்: மனைவி புகார்

83பார்த்தது
திண்டிவனம் அருகே கணவர் மாயம்: மனைவி புகார்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன், (61). இவர் செஞ்சி ரோட்டிலுள்ள ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் லோகநாதன் கடந்த 5ம் தேதியிலிருந்து காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ரேணுகா கொடுத்துள்ள புகாரின் பேரில் நேற்று(செப்.18) திண்டிவனம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி