முதல்வருக்காக ஸ்வீட்ஸ் வாங்கிய ராகுல் காந்தி (வீடியோ)

68பார்த்தது
தேர்தல் பரப்புரை பிரச்சாரத்திற்காக கோவை வந்திருந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக வரும் வழியில் பேக்கரி ஒன்றில் இனிப்புகள் வாங்கினார். இது குறித்தான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ராகுல் காந்தி இயல்பாக சாலையைக் கடந்து கடைக்குள் செல்கிறார். அங்கு இனிப்பை சுவை பார்த்து, இனிப்புகள் வாங்குகிறார். பின்னர் அங்கிருந்த பெண்களிடம் புகைப்படம் எடுத்துவிட்டு வாங்கிய இனிப்புக்காக பணம் கொடுத்து விட்டு செல்கிறார். இந்த வீடியோவில், ராகுல் இயல்பாக சாலை டிவைடரை தாண்டும் காட்சி பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி