வேலூர் மாவட்டம் அணைக்கட்டு எம்எல்ஏவாக உள்ள நந்தகுமார், தனக்கு யாரும் சால்வை அணிவிக்க வேண்டாம். அதற்கு மாற்றாக புத்தகம், பேனா போன்றவற்றை அளிக்கலாம் என நிர்வாகிகளுக்கு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஆய்வுக்காக இன்று அணைக்கட்டு பகுதிக்கு எம்எல்ஏ நந்தகுமார் சென்று கொண்டிருந்தபோது ஊசூர் பகுதியில், எம்எல்ஏவின் காரை பார்த்து கத்தி கூச்சலிட்டுள்ளனர்.
பின்னர் காரை நிறுத்திய எம்எல்ஏ, மாணவர்களுடன் உரையாடினார். அப்போது நிகழ்ச்சிகளில் நிர்வாகிகளிடம் பெற்ற பேனா மற்றும் பென்சில்களை மாணவர்களுக்கு வழங்கி நன்றாக படிக்கும்படி அறிவுரை கூறினார்.
மேலும் இனி எந்த பகுதிக்கு சென்றாலும் மாணவர்களை சந்தித்தால் அவர்களுக்கு பேனா மற்றும் பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்குவேன் என தெரிவித்தார்.