ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இளம் பெண் வயிறு மற்றும் கைப்பகுதியில் கயிறு கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு. இளம் பெண்ணின் இறப்புக்கு சத்யாவின் அக்கா மற்றும் அவரது கணவரே காரணம் எனக்கூறி உறவினர்கள் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் கீழ்புதூர் பகுதியில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இளம் பெண் சடலமாக மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள், சிலர் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கிணற்றில் சடலமாக மிதந்த உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் ஆலங்காயம் மலைரெட்டியூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி சத்யா (22) என்பதும் இவர்களுக்கு திருமணமாகி மூன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் 3 வயதில் நிஷாந்தி என்ற பெண் குழந்தை உள்ளது.