மினி பஸ் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து!

77பார்த்தது
வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒடுகத்தூர், குருவராஜபாளையம், பள்ளிகொண்டா, ஒலகாசி, ஒதியத்தூர், அகரம் போன்ற பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலையில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் தினமும் நிறுவனத்துக்கு சொந்தமான மினி பஸ்சில் அழைத்துச்செல்லப்பட்டு பணி முடிந்ததும் இருப்பிடங்களுக்கு கொண்டு வந்து விடப்படுகின்றனர். அதன்படி பணியில் ஈடுபட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி முடிந்ததும் மினி பஸ்சில் தங்களது ஊர்களுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

ஒடுகத்தூரை அடுத்த கரடிகுடி கிராமம் அருகே சாலை வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. அப்போது பள்ளத்தில் இறங்கி ஏறியபோது சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணம் செய்த பெண்கள் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி