வடமாநில தொழிலாளர்கள் 4பேர் மீது மின்சாரம் பாய்ந்து படுகாயம்.

583பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி பகுதியில் ரயில்வே மின்சார கம்பிகளை மாற்றும் பணியில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த தனியார் இன்ஜினியரிங் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து சென்னை அன்னூர் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் மூலம் சப் கான்டெக்ட் கொடுக்கப்பட்டு ரயில்வே மின்சார கம்பிகள் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் மொத்தம் 16 பேர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மின் கம்பியை மாற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஶ்ரீராம் 25, நந்தலால், 22 , சுருதி கோ 30, சூராம் 20, ஆகியோர் மீது திடீரென மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்தனர். பின்னர் அங்கிருந்த சக ஊழியர்கள் அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதில் சூராம் 20 என்பவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் அவரை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி