தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு

76பார்த்தது
தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு
திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தப்பட உள்ள கிராம நிர்வாக அலுவலர் இளநிலை உதவியாளர் தட்டச்சர் ஆகிய பதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் 02/01/ 2024 திங்கட்கிழமை முதல் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்பு சேர விருப்பம் உள்ளவர்கள் இணையதளத்தின் மூலம் தங்கள் பதிவுகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்கள் 0417-9222033 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மாவட்டத்தில் தகுதி வாய்ந்த தேர்வாளர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி