நீலகிரி மாவட்டத்தில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்குள்ள முக்கிய நதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், கூடலூரில் பாண்டியரின் கிளை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 3 பேர் காருக்குள் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து வந்த மீட்புப்படையினர் கேரளாவைச் சேர்ந்த 3 இளைஞர்களையும் பத்திரமாக மீட்டனர். புதிதாக வாங்கிய காரில் இவர்கள் சுற்றிவந்தபோது கார் ஆற்றில் சிக்கிக்கொண்டது.