தென்காசி: குற்றாலம் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்று காலை தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தண்ணீர் வரத்து கட்டுக்குள் வந்துள்ளதால் தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.