தலைமை காஜி என்பவர் மாநிலத்தில் இஸ்லாமிய மக்களின் முக்கிய திருவிழாக்களான மாதாந்திர பிறைகளை, ரமலான் நோன்பு, ஈது பண்டிகை உட்பட பிற நிகழ்வுகளின் தேதிகளை அறிவிப்பார். அதனை இஸ்லாமிய மக்கள் கொண்டாடும் வழிகாட்டல், சமய சடங்கு போன்றவற்றையும் அறிவிப்பார். தமிழ்நாடு அரசின் சார்பில் ரமலான் தேதி மற்றும் கொண்டாட்டத்தை உறுதி செய்வது இவரே. இஸ்லாமிய சட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு அறிவுரை வழங்குவதும் இவரின் பணியில் ஒன்றாகும்.