இஸ்லாமிய சமூகத்துக்கு வாழ்க்கையினை அர்ப்பணித்த அறிஞர் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிப், அரபுமொழி இலக்கியத்தில் MA, M.Phill, PhD பட்டம் பெற்றவர் ஆவார். எகிப்தில் உள்ள அல்-அஸ்ஹர் பல்கலையில்., இஸ்லாமிய கல்வியில் மிகஉயரிய அல்-இஜாஸதுல் ஆலியா பட்டம் பெற்றவர். கர்நாடக நவாப் அரசவையின் திவான் முகமது கவுஸ் குடும்பத்தை சேர்ந்த சலாவுதீன் தமிழ்நாட்டில் இஸ்லாமிய மக்களின் அடையாளம் ஆவார். இவரின் கொள்ளு தாத்தா காஜி உபைதுல்லா பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் அரசு தலைமை காஜி என்பது குறிப்பிடத்தக்கது.