காவேரிப்பாக்கத்தில் தி. மு. க. செயற்குழு கூட்டம்!

85பார்த்தது
காவேரிப்பாக்கத்தில் தி. மு. க. செயற்குழு கூட்டம்!
காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய தி. மு. க. செயற்குழு கூட்டம் பொன்னப்பந்தாங்கல் பகுதியில் ஒன்றிய அவைத்தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் தெய் வசிகாமணி கலந்துகொண்டு நாளை (சனிக்கிழமை) ராணிப்பேட்டையில் நடைபெறும் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பொதுக்கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் குடும்பமாக சென்று தி. மு. க. ஆட்சியின் சாதனைகளை பொதுமக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும் என்றார்.

இதில் ஒன்றிய பொருளாளர் ரவி, பாணாவரம் ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி