குடியாத்தத்தை அடுத்த பரசுராமன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம் (வயது 42), லாரி டிரைவர். இவரது மனைவி கங்கா. கடந்த சில மாதங்களாக விநாயகம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு விநாயகம் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். இதனால் மயங்கிய நிலையில் இருந்த விநாயகத்தை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.