கே. வி. குப்பம் அடுத்த கெம்மங்குப்பம் கிராமத்தில் பொது இடத்தில் இருந்த காளியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தவும், திருவிழா நடத்தவும் கடந்த சில நாட்களாக இரு சமுகத்திருக்குள் (தலித் Vs யாதவ) பிரச்சனை நீடித்து வந்த நிலையில் கடந்த 6-ம் தேதி (06. 08. 2024) மாலை திடீரென ஒரு தரப்பை சேர்ந்தவர்(யாதவ்) ஜேசிபி இயந்திரம் கொண்டு கோவிலை இடித்து தள்ளி, மூலஸ்தனலத்தில் இருந்த சிலையை எடுத்து சென்றுள்ளனர். இது குறித்து பட்டியல் இன மக்கள் காவல் நிலையம், ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதற்க்கு இடையில் குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமையில் அமைதி குழு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இரு தரப்பினருக்கும் அறிவுரை வழங்கி அனுப்பப்பட்டது.
இந்நிலையில் கோவில் இடிப்பு தொடர்பாக தேவரிஷிகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் ராஜா அளித்த புகாரின், பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்துதல் பிரிவிலும்,
கெம்மங்குப்பம் பகுதியை சேர்ந்த நவின் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் SC/ST Act, பொது சொத்து சேதம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் லோகநாதன் மீது கே. வி. குப்பம் காவல் துறையினர் 2 வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காளியம்மன் கோவிலுக்கு பட்டியல் இனத்தவர் வரக்கூடாது என கூறி மாற்று சமுகத்தை சேர்ந்த லோகநாதன் என்பவர் ஜே. சி. பி இயந்திரம் கொண்டு கோவிலை இடித்துள்ளார்.
இதுகுறித்து கே வி குப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.