ரயிலில் கஞ்சா கடத்திய 3பேரை போலீசார் கைது செய்தனர்

59பார்த்தது
கஞ்சா கடத்திய 3 பேர் கைது.

காட்பாடி ரயிலில் நள்ளிரவு கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் டாடா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று நள்ளிரவு காட்பாடி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது பொதுப்பெட்டியில் வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இருக்கைக்கு அடியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பைகள் இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரிந்தது.
இதுதொடர்பாக 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்த ஆகாஷ் (22), மனோஜ் (22), பிரிதீஷ் (23) என்பதும் ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த சுமார் 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி