பொன்னை அருகே மாரியம்மன் கோவில் பூ சூடல் விழா

65பார்த்தது
பொன்னை அருகே மாரியம்மன் கோவில் பூ சூடல் விழா
காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த கீரை சாத்து கிராமத்தில் பழமை வாய்ந்த ரேணுகாம்பாள் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வெள்ளி, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடைபெறும். மேலும் ஆடி மாதத்தில் காப்பு கட்டுதல் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். மேலும் ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை இக்கோவிலில் பூச்சுடர் விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலை விசேஷ அபிஷேகங்களுடன் தொடங்கிய பூச்சுடர் நிகழ்ச்சியில் பல்வேறு வகையான சிறப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூலவருக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :