அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுகாதார வளாகம்

63பார்த்தது
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுகாதார வளாகம்
லத்தேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுகாதார வளாகம் மாவட்ட கல்வி அலுவலர் திறந்து வைத்தார்.

கே வி குப்பம் தாலுகா லத்தேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்தில் ரூபாய் 26 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில் 17 கழிவறைகள் கொண்ட சுகாதார வளாகம் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயா முருகேசன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்யபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை ஜெயசீலி கிறிஸ்டி வரவேற்றார். பள்ளி துணை ஆய்வாளர் சைனி வாழ்த்து பேசினார் மாவட்ட கல்வி அலுவலர் தனலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆறு ஏழு எட்டாம் வகுப்பு மாணவிகள் உருவாக்கிய கைவினைப் பொருள்கள் கண்காட்சியை பார்வையிட்டு சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் லத்தேரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் பள்ளி பொருளாளர் சரவணன் உட்பட பள்ளி மேலாண்மை குழுவினர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டனர் துணை தலைமை ஆசிரியர்கள் ஆனந்தன் குணசேகரன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி