நகராட்சி குப்பைகளை வாருவதில்லை பெண் கவுன்சிலர் குற்றச்சாட்டு

74பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் சரியாக நகர் பகுதிகளில் உள்ள வார்டுகளில் தூய்மை பணிகளை மேற்கொள்வதில்லை என நகர மன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் கவுன்சிலர் குற்றம் சாட்டி கேள்வி எழுப்பியதால் அங்கு பரப்பரப்பு நிலவியது. ஆங்காங்கே குப்பைகள் காணப்பட்டு வருவதாகவும், சரியாக பணியை மேற்கொள்வதில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார். அதற்கு நகராட்சி ஆணையாளர்கள் மாறிக்கொண்டே இருப்பதால் இந்த நிலை நிலவி வருவதாக நகர மன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி