*தமிழக முதல்வர் அரியலூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழாவை துவக்கி வைத்ததை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டார பகுதிகளில் இருக்கும் 1412 பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. *
தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் முதல் கட்டமாக 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது இதன் பயனாக 77. 3% குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பினர் இதன் தொடர்ச்சியாக இன்று அரியலூர் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் இரண்டாம் கட்ட ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழாவை காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அண்ணான்டப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் தலைமையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டார பகுதிகளில் வசிக்கும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்ட ஆறு மாத குழந்தைகளின் 1412 பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது