ரோட்டரி சங்கம் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கல்!

64பார்த்தது
ரோட்டரி சங்கம் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கல்!
அரக்கோணம் ரோட்டரி சங்கம் சார்பில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி மற்றும் நேத்ரா மருத்துவனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி, வீல் சேர் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று.

நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். செயலாளர் மனோகர் பிரபு, பொருளாளர் லட்சுமிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக ரோட்டரி சங்க மாவட்ட ஆளு நர் பரணிதரன், அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழு தலைவர் டி. ஆர். சுப்பிரமணியம், (டி. ஜி. என். டி. ) டி. எஸ். ரவிகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.

நிகழ்ச்சியில் நேத்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர்கள் டாக்டர்கள் உமாபதி, நேத்ரா, ரோட்டரி நிர்வாகிகள் கே. பி. கே. பிரபாகரன், ஜி. மணி, பன்னீர் செல்வம், முருகன் பார்மசி வெங்கடரமணன், ஆர். பி. ராஜா, பிரதீப் குமார், விகாஸ், நரேந்திரன், மோகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி