நெமிலி அருகே டிராக்டர் மீது ஆட்டோ மோதி விபத்து!

80பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே ரயில்வே கேட் அருகே இரவு டிராக்டர் ஒன்று டயர் பஞ்சர் ஆகி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அவ்வழியாக பரமேஸ்வரமங்கலத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் வயது (50) என்பவர் தனது ஆட்டோவில் வந்தபோது டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக மோதியதால் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது.

மேலும், அவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி