உறவினர்களுக்கிடையே மோதல் - இளைஞர் கைது!

53பார்த்தது
வேலூர் ஒடுகத்தூர் அடுத்த தென்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதா (வயது 55) இவரின் உறவினரான தாமோதிரன் (வயது 23) ஆகியோர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக நிலப்பிரச்சனை தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருதரப்பும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக சண்டையிட்டுள்ள இதில் தாமோதீரனை ஜெகதா என்பவர் அசிங்கமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தாமோதிரன் அருகே இருந்த கருங்கல்லை எடுத்து ஜெகதாவை தாக்கியுள்ளார். இதில் ரத்தகாயமடைந்த ஜகதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஜகதாவின் மகன் சேட்டு என்பவர் அருகே இருந்த வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தாமோதிரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி