திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியில் தேங்கி உள்ள மழை நீரை அரசு அதிகாரிகள் நேரில்சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது பாட்ஷா பகுதியில் உள்ள கழிவு நீரை தூர்வார வேண்டும், முறையான சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும், அங்கன்வாடி பள்ளியை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.