கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருசக்கர வாகனம் ஓட்டிய சபரீஷ் (23) என்ற இளைஞருக்கு போலீசார் ரூ.23,500 அபராதம் விதித்துள்ளனர். வாகன சோதனையின்போது பதிவெண் பொருத்தப்படாதது, அதிக ஒலி எழுப்பும் சைலன்சருடன் இயக்குதல், வீலிங் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வருவது போன்றவை போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்ததுடன் பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர்.