முதல்வருடன் ஐக்கிய அமீரக வர்த்தகத் துறை அமைச்சர் சந்திப்பு

59பார்த்தது
முதல்வருடன் ஐக்கிய அமீரக வர்த்தகத் துறை அமைச்சர் சந்திப்பு
ஐக்கிய அமீரகத்தின் வர்த்தகத் துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல்மரி, இன்று (ஜுலை 25) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். முன்னதாக, சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த சந்திப்பின் போது, அப்துல்லா பின் தௌக் அல்மரியை பொன்னாடை அணிவித்து முதலமைச்சர் வரவேற்றார். இதில் அமைச்சர் டிஆர்பி ராஜா, தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.