இன்றைய ராசிபலன் (ஜனவரி 17)

55720பார்த்தது
இன்றைய ராசிபலன் (ஜனவரி 17)
மேஷம்: இன்றைய செயல்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அமைதியின்மை காரணமாக நீங்கள் கவனத்திலிருந்து விலக நேரலாம். இன்று உங்கள் நிதி நிலைமையில் வளர்ச்சி காணப்படாது. இன்று உங்களிடம் அமைதியின்மை காணப்படும். முடிந்த அளவு மகிழ்ச்சியாக இருக்க முயற்சியுங்கள்.

ரிஷபம்: இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்களின் அனுசரணையான தகவல் தொடர்பு திறமை காரணமாக நற்பலன்களைப் பெறுவீர்கள். இன்று பண வரவிற்கு சிறந்த நாள். இன்று பணத்தை சேமிக்க முயற்சி செய்வீர்கள். இன்று நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

மிதுனம்: இன்று நீங்கள் நம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள். எனவே வெற்றிகரமான நாளாக அமையும். இன்று நன்கு சம்பாதிப்பீர்கள். இன்று நிதி நிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சினை ஏதும் இருக்காது.

கடகம்: இன்று மந்தமான நாளாக இருக்கும். நீங்கள் இறை நாட்டம் கொண்டு பக்தியில் ஈடுபடுவீர்கள். இன்று ஆரோக்கியமான நிதி நிலைமை காணப்படாது. கூடுதல் செலவுகள் சந்திக்க நேரும்.

சிம்மம்: இன்று கூடுதல் பொறுப்புகள் காணப்படும். இது உங்களுக்கு கவலை அளிக்கும். பணப்புழக்கம் சுமாராக இருக்கும். இன்று அதிக செலவுகளை சந்திக்க நேரலாம். சளி அல்லது இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கன்னி: இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். நீங்கள் சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உங்களிடம் இருக்கும் பணம் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். உங்களின் உடல் மற்றும் மன நிலை சிறப்பாக இருக்கும்.

துலாம்: உங்கள் நம்பிக்கையான அணுகுமுறையும் உங்களின் சிறந்த முயற்சியும் உங்களுக்கு இன்று அதிர்ஷ்டத்தை பெற்றுத் தர போதுமானதாக இருக்கும். இன்று கடனுக்கான அனுமதி கிடைக்கப் பெற்று அதன் மூலம் பண வரவு காணப்படும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்: இன்று பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நீங்கள் எந்த செயலையும் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து செய்ய வேண்டும். இன்றைய நாளில் பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக இருக்காது. தோள் வலி மற்றும் தோல் எரிச்சல் போன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு: பல சௌகரியங்கள் காணப்பட்ட போதிலும் நீங்கள் பதட்டமாக உணர்வீர்கள். இன்று அதிக செலவுகள் காணப்படும். பண இழப்பிற்கான வாய்ப்பும் உள்ளது. உங்கள் தாயின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரலாம். இது உங்களுக்கு சற்று கவலை ஏற்படுத்தும்.

மகரம்: இன்று வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நாள். அனுசரித்து போகும் அணுகுமுறை மூலம் இன்று செயல்களை எளிதாக மேற்கொள்ளலாம். உங்கள் பணத்தை சேமிப்பதன் மூலம் பணத்தை பாதுகாப்பீர்கள். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்: இன்று உங்கள் செயல்களில் நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். நிதி விஷயங்களில் கூடுதல் சுமைகள் காணப்படும். இன்று உங்களுக்கு பல் வலி மற்றும் கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம்: இன்று உங்கள் சௌகரியங்கள் மற்றும் மகிழ்ச்சியை அதிகரிக்கும் விருப்பங்கள் உங்களிடம் காணப்படும். வீடு கட்டுதல் அல்லது புனர் நிர்மாணம் செய்வதற்கு பணம் செலவு செய்ய நேரலாம். இன்று நீங்கள் மிகவும் ஆரோக்கியமாக உணர்வீர்கள்.

தொடர்புடைய செய்தி