நூலகத்தில் காந்தி ஜெயந்தி விழா

81பார்த்தது
நூலகத்தில் காந்தி ஜெயந்தி விழா
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி. ம. புதூர் கிளை நூலகத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மாணவர்களுக்கான பல்திறன் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்விற்கு வாசகர் வட்ட தலைவர் பொன். சந்திரசேகரன் தலைமை தாங்கினார். நூலகர் ஜா. தமீம் வரவேற்றார். ஆசிரியர் ம. பழனி முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கல்வி மாவட்டத் தலைவர் க. வாசு பங்கேற்று, மாணவர்களிடையே காந்தியின் பண்பு நலன்களை பற்றி பேசினார். வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் மாணவர்களிடையே காந்தியின் அகிம்சை என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும், மாணவர்களுக்கான பல்திறன் போட்டிகளில் காந்தியை போற்றும் பேச்சு போட்டி, ஓவிய போட்டி, காந்தி வேடமணிந்து கவிதை போட்டி உள்ளிட்டவை நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் ம. பழனி ரூபாய் 1000/- செலுத்தி புரவலராக இணைந்தார். இறுதியில் சமூக ஆர்வலர் அ.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி