திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பெரணமல்லூர் அருகே உள்ள விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த தங்கவேலு (49) விவசாயியான இவர் அவருடைய நிலத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த எட்டயபுரத்தை சேர்ந்த வேலு (49) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியதில் படுகாயம் அடைந்த தங்கவேலு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்று (அக்.,1) பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.