எலக்ட்ரீசியன் மீது தாக்குதல், போலீசார் விசாரணை

84பார்த்தது
எலக்ட்ரீசியன் மீது தாக்குதல், போலீசார் விசாரணை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கம் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை(53), எலக்ட்ரீஷியன். இவரது வீட்டின் அருகே வசிப்பவா் சேஷாத்திரி(43).

கடந்த 15-ஆம் தேதி சேஷாத்திரிக்கு சொந்தமான பைக் சாலையை அடைத்தாற்போல் நிறுத்தி வைத்துள்ளார்.
அப்போது, அந்த வழியாகச் சென்ற ஏழுமலை இப்படி பைக்கை நிறுத்தினால் எப்படி செல்வது என சேஷாத்திரியிடம் கேட்டுள்ளாா். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சேஷாத்திரி, அவரது தம்பி பாரி (32) ஆகியோா் சோ்ந்து, ஏழுமலையையும், தடுக்க வந்த அவரது மகன் உதயாவையும் (22) தாக்கினார்.

இதில் காயமடைந்த ஏழுமலை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா்.

இதுகுறித்து ஏழுமலை அளித்த புகாரின் பேரில் சேஷாத்திரி, பாரி ஆகிய இருவா் மீதும் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தொடர்புடைய செய்தி