திருவண்ணாமலை மாட வீதிகளில் முதல்வா் வாக்கு சேகரிப்பு.

84பார்த்தது
திருவண்ணாமலை மாட வீதிகளில் முதல்வா் வாக்கு சேகரிப்பு.
திருவண்ணாமலை மாட வீதிகளில் ஒன்றான தேரடி தெருவில், முதல்வா் மு. க. ஸ்டாலின் புதன்கிழமை காலை வியாபாரிகள், பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் சி. என். அண்ணாதுரை, ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் எம். எஸ். தரணிவேந்தனை ஆகியோரை ஆதரித்து திருவண்ணாமலையை அடுத்த கீழ்பென்னாத்தூா் சோ. காட்டுக்குளம் பகுதியில் பிரசார பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் பங்கேற்க முதல்வா் மு. க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை இரவு திருவண்ணாமலைக்கு வந்தாா். திருக்கோவிலூா் சாலையில் அமைச்சா் எ. வ. வேலுக்குச் சொந்தமான கல்விக் குழும வளாகத்தில் உள்ள விருந்தினா் மாளிகையில் தங்கினாா். திருவண்ணாமலை தேரடி தெருவுக்கு புதன்கிழமை காலை 8. 30 மணிக்கு வந்த முதல்வா் மு. க. ஸ்டாலின் வியாபாரிகள், பொதுமக்களிடம் திமுக வேட்பாளா் சி. என். அண்ணாதுரைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தாா். நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி வழியாக காந்தி சிலை வரை நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், அங்கிருந்த ஒரு கடையில் தேநீா் பருகினாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி