சேத்துப்பட்டில் பாடல் பாடி வாக்கு சேகரித்த சீமான்

1104பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு டவுன் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆரணி நாடாளுமன்ற வேட்பாளர் பாக்கியலட்சுமியை ஆதரித்து மைக் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது சீமான் பாடல் பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார் அவர் பாடிய பாடல்: மாற்றம் வரணும் பாரு மாற்றம் வரணும் நாட்டு மக்கள் நல்லா இருக்க நோக்கம் இருப்பதாறு அந்த எண்ணம் கொண்ட சின்னத்தில ராசா அக்கா நாம எல்லாருமே ஓட்டு போடணும், ஐயா அக்கா ஏற்றம் வரணும் பாரு ஏற்றம் வரணும் பாரு, ஏறு ஜணம் வாழ்க்கையில முன்னேற்றம் வரணும் பாரு அந்த எண்ணம் கொண்ட சின்னத்தில ராசாக்கா நாம எல்லாருமே ஓட்டு போடணும் ஐயா அக்கா முயற்சி எடுக்க வேண்டும் முடிவு பண்ணி பார்க்க வேண்டும் என் மத்ததெல்லாம் ஒன்னும் சேர்ந்தா ராசாக்கா மைக் சின்னத்தில ஓட்டு போடணும் ஐயா அக்கா..


என இவ்வாறு தொடர்ந்து பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். இந்நிகழ்வில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி