திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த வெண்மணி கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் சம்பஸ்வர பூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சம்பஸ்வர பூஜையை முன்னிட்டு அதி காலை முதலே சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது இந்நிகழ்வில் ஆலய நிர்வாகி பாண்டியன், கோயில் பூசாரி சுள்ளான் சுரேஷ் விழா குழுவினர், அன்னதான குழு நண்பர்கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.