திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவாயில் திறப்பு விழா மற்றும் கலைஞரின் கனவு இல்லம் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் விழா இன்று (செப்டம்பர் 16) நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக சட்டப்பேரவை துணை தலைவர் கு. பிச்சாண்டி மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பணி ஆணையினை வழங்கினர்.
இந்நிகழ்வில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி சரவணன், ஒன்றிய கழக செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.