திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் அடுத்த வேட்டவலம் பேரூராட்சியில் அமைந்துள்ள திடக்கழிவு கிடங்கை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகரும், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான கு. பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆரஞ்சு ஆறுமுகம், நகர செயலாளர் முருகையன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் வேட்டவலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி உடன் இருந்தார்.