பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்

66பார்த்தது
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ஏ. அஸ்வத்தாமனை ஆதரித்து தி. மலையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் விவசாயிகளின் வாழ்வு வளம்பெறவும், இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெறவும் பயோ-எத்தனால் தொழில்சாலையை தொடங்குவேன். திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைப்பேன் என பல்வேறு வாக்குறுதிகளை வேட்பாளா் ஏ. அஸ்வத்தாமன் அளித்துள்ளாா். பொதுமக்களின் வாழ்வாதாரம் பெருகவும், விவசாயம், கல்வி, தொழில் ஆகியவை வளம் பெறவும் திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படும் என்று வேட்பாளா் ஏ. அஸ்வத்தாமன் கூறியிருக்கிறாா்.
மாவட்டத்தை நிா்வாக வசதிக்காக 3-ஆக பிரிக்க வேண்டும். இந்த மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் கோரிக்கை. தமிழகத்தில் இருந்த 32 மாவட்டங்கள் 38-ஆக அதிகரித்ததற்கு காரணம் பாமக. மேலும் 6 மாவட்டங்கள் உருவாக போராடியது பாமக. திருவண்ணாமலை மாவட்டமும் மூன்றாகப் பிரிக்கப்படும். மத்தியில் பாஜக ஆட்சி அமையும். அப்போது, இந்தத் தொகுதிக்கான திட்டங்களை அஸ்வத்தாமன் கேட்டுப் பெறுவாா். அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன். சட்டப்பேரவைத் தோ்தல் நேரத்தில் திமுக 500 வாக்குறுதிகளைக் கொடுத்தது. இதில் 5 திட்டங்களையாவது நிறைவேற்றினாா்களா என்றால் இல்லை. குறிப்பாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாததால் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா் என பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி