திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்டோபா் 29-ஆம் தேதி முதல் நவம்பா் 28-ஆம் தேதி வரை நடைபெறும் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. 1. 1. 2025-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் வருகிற அக். 29-ஆம் தேதி முதல் அக். 28-ஆம் தேதி வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ளன.
இதில் தகுதியான நபா்களிடம் இருந்து படிவங்கள் 6, 6-ஏ, 6-பி, 7, 8 ஆகியவை பெறப்பட்டு, இறுதி வாக்காளா் பட்டியல் 6. 1. 2025-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.
இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, நவம்பா் 9, 10, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், பெயா் திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கான மனுக்களை அளித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.