மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கிய எம்எல்ஏ

82பார்த்தது
மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கிய எம்எல்ஏ
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட, தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு பயிலும் பள்ளியிலேயே ஆதார் சிறப்பு முகாமினை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி துவக்கி வைத்து நடப்பு கல்வியாண்டிற்கான புதிய பாடப்புத்தகங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர்கள் இரமேஷ், செந்தில்குமார், ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், மு. ஒன்றிய செயலாளர் ஜெயராமன், நகர செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் சதீஷ்குமார், மாதேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி முருகேசன், துணை தலைவர் பரமேஸ்வரி லட்சுமணன், மாவட்ட தொ. ஆசிரியர்கள் கூட்டணி செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி