திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் சார்பாக திருவண்ணாமலை மாவட்ட தேசிய பசுமைப்படையின் ஏற்பாட்டில் இன்று 26.11.24 சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேச்சுப்போட்டி பள்ளியின் தலைமை ஆசிரியர் சுதா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். விழாவில் திருவண்ணாமலை தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் த. கார்த்திகேயன், முதலமைச்சரின் பசுமை தோழர் சரண்யா குமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.