எருது விடும் திருவிழாவில் 30 பேர் காயம்

72பார்த்தது
ஆரணி அடுத்த களம்பூர் மேட்டுத்தெருவில் உள்ள ராதா ருக்குமணி சமேத ராமபிரான், சித்திபுத்தி விநாயகர் கோயில் மாசிமாத கிருத்திகையை முன்னிட்டு காளை விடும் திருவிழா நேற்று நடந்தது. கோயில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்து பொதுமக்கள் காளைவிடும் விழா தொடங்கி வைத்தனர். அப்போது வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டது. மேலும், காளை ஓடும் பாதையில் மண் கொட்டப்பட்டு, இருபுறமும் கம்புகளால் தடுப்புகள் கம்பிகள், கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, விழாவில் இளைஞர்களுக்கு மத்தியில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது. அப்போது, களம்பூர் மற்றும் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விழாவைகாண ஏரளானமாக பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டனர். அப்போது உற்சாகத்துடன் காளைகளை விரட்டிக் கொண்டு சென்றனர். மேலும், விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிவந்த காளைகள் முட்டியதில் 30க்கும் மேற்பட்ட நபர்களுக்கு காயம் ஏற்பட்டது. அப்போது, களம்பூர் வட்டார மருத்துவ அலுவலர் வேல்முருகன், தலைமையில் சுகாதார ஆய்வாளர் சக்திவேல் மற்றும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். படுகாயம் அடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி