உடுமலை: மாநில எல்லையில் கிருமிநாஷினி தெளிக்கும் பணி தீவிரம்

84பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக கேரளா எல்லை பகுதியான ஒன்பதாறு சோதனை சுவாடி பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பண்ணைகளில் பராமரிக்கப்பட்டு வந்த வாத்துக் கோழிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென கொத்து கொத்தாக இறந்தன. அதைத் தொடர்ந்து வாத்துகளை பரிசோதனை செய்ததில் பறவை காய்ச்சல் தாக்குதல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தமிழக- கேரளா எல்லைகளில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டு உள்ளது.
கால்நடை உதவி மருத்துவர், ஆய்வாளர், இரண்டு கால்நடை பராமரிப்பு உதவியாளர் அடங்கிய குழுவினர் மூன்று குழுக்களாக சுழற்சி முறையில் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் கோழி இறைச்சி, முட்டை, கோழி தீவனம் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று கால்நடை துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையில் இந்த பணிகளை திருப்பூர் மண்டல கால்நடை பராமரிப்பு துறை இயக்குனர் புகழேந்தி ஆய்வு செய்தார் உடன் உடுமலை உதவி இயக்குனர் ஜெயராம் கால்நடை மருத்துவர்கள் ராஜ சொக்கப்பன், அப்துல் கலாம் மற்றும் ஊழியர்கள் இருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி