திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு மல்லிகை ஓரு கிலோ ரூ1000, செவ்வந்தி ரூ 400, பட்டன் ரோஸ் ரூ. 400 , முல்லை ரூ. 1000, செண்டுமல்லி ரூ. 1200க்கும் கோழிக்கொண்டை ரூ. 120க்கும், அரளி ரூ 700க்கும் என பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. வரத்து குறைவாலும் ஆயுத பூஜையை முன்னிட்டும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.