திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள புகழ்பெற்ற 100 ஆண்டுகள் பழமையான அருள்மிகு பிரசன்ன விநாயகர் கோவிலில் இன்று(செப்.7) விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு காலையில் ஹோம பூஜையும், பால், தயிர் உட்பட 16 வகையாக பொருட்கள் மூலம் அபிஷேகங்கள் சிறப்பு பூஜைகள் செய்யபட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது. உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் மேற்கொண்டனர்.